போன் இல்லாமல் கம்ப்யூட்டரில் இருத்து SMS செய்யும் வழிகள்

0
Views : 1638

Posted: 11 months ago

NEWS

Description

போன் இல்லாமல் கம்ப்யூட்டரில் இருத்து SMS செய்யும் வழிகள்:


வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் இருந்து மொபைல்போன் இல்லாமலேயே கம்ப்யூட்டரில் இருந்து மற்றவர்களுக்கு சாட் செய்ய முடியும். ஆனால், SMS செய்ய முடியுமா?. பெரும்பாலானோருக்கு தெரிந்திருப்பதில்லை அல்லது கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சில செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் போன்கள் இல்லாமலேயே கம்யூட்டரில் இருந்து மொபைலுக்கு வரும் SMS -களுக்கு பதிலளிக்க முடியும். என்னென்ன செயலிகள் இருக்கின்றன? என்பதை பார்க்கலாம்.

கம்ப்யூட்டரில் இருந்து மெசேஜ் செய்வதற்கான பிரபலமான செயலி ஏர்டிராய்டு. இந்த செயலியைப் பயன்படுத்தி பைல்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ள முடியும். பேக்கப் மற்றும் Sync, கான்டேக்ட் மேனேஜ்மென்ட் அகிய வசதிகளும் உள்ளன. கம்ப்யூட்டரின் ஸ்கிரீனை ரெக்கார்டு செய்யும் வசதியும், புகைப்படம் எடுக்கும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. ப்ரீமியம் யூசர்களாக இருந்தால் மிகப்பெரிய பைல்கள் மற்றும் ஃபோல்டர்களைக் கூட டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். ப்ரீ வெர்சனிலேயே யூசர்களுக்கு போதுமான அம்சங்கள் இருக்கின்றன.

ஆன்டிராய்டு போன்களை கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது மைக்ரோசாப்ட் யுவர் போன் செயலி. இந்த செயலியை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்போன் என இரண்டிலும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதே செயலியில் தற்போது வெளியாகியிருக்கும் நியூ வெர்சன் மூலம் விண்டோஸ் ஸ்கிரீன் மூலம் கால் செய்ய முடியும். இந்த செயலி இலவசமான ஒன்று.

தனிநபர்கள் பெரும்பாலானோர் மைட்டி டெக்ஸ்ட் செயலியை அதிகம் விரும்புகின்றனர். இந்த செயலியை இன்ஸ்டால் செய்து உபயோகப்படுத்துவபர்களுக்கு மாதம் தோறும் 250 இலவச மெசேஜ் செய்துகொள்ளும் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. ப்ரீமியம் எடிசனில் இணையும் யூசர்கள் மாதம்தோறும் 6.99 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு கூடுதல் வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

ஜாயின் செயிலி அண்மைக் காலத்தில் வெளியான பிரபலமான டெக்ஸ் மெசேஜ் செயலியாகும். கம்ப்யூட்டரில் இருந்து மொபைலை பயன்படுத்தாமலேயே மெசேஜ் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாயின் செயலி, அலர்டஸ்-ஐக் கூட விண்டோஸ் ஸ்கிரீனில் காட்டும். டாஸ்க் பார், கூகுள் அசிஸ்டென்ட், டிரான்ஸ்பர் பைல்கள், ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் வசதிகள், பேக்கரவுண்ட் மாற்றம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முடியும். உங்களின் லொக்கேஷனைக் கூட பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி உள்ளது.

பிரவுசர் பிளக்கின் இல்லாமலேயே இந்த செயலியை விண்டோஸில் பயன்படுத்த முடியும். இந்த செயலி ஐ.ஓ.எஸ், ஆன்டிராய்டு, மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஐபேட், மேக் ஓ.எஸ் மற்றும் குரோம் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டண செயலியான இது மற்ற போட்டி செயலிகளை விட குறைவான கட்டணத்தில் அதிக அம்சங்களை யூசர்கள் பயன்படுத்திக்கொள்ள கொடுக்கிறது.

Join our Telegram for more updates

Similar Posts

×