Description
கீரம்பூர் எட்டுக்கை அம்மன் திருவிழா 20 To 30 April 2021, Namakkal.
Festival Got Cancelled Due To Covid19 Precaution
அன்புடையீர் வணக்கம்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூகத்தின் செம்பூத்தான் குலம் பண்ணை குல மக்களுக்கு பாத்தியப்பட்ட குல தெய்வமாய் விளங்கும் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் இல் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு எட்டுக்கை அம்மன், பொங்கல் மற்றும் தேர் திருவிழா நிகழும் பிலவ வருடம் சித்திரை மாதம் 7ஆம் தேதி முதல் சித்திரை 17ஆம் தேதி வரை (20-4- 2021 தேதி முதல் 30 -4- 2021 தேதிவரை) நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டுள்ளபடி பெரியோர்கள் முப்பாட்டுக்காரர்கள் பிப்பாட்டுக்காரர்கள் முன்னிலையில் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுத்து அம்மனின் அருளைப் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
இங்கனம் செம்பூத்தான் குலம் பண்ணை குலம் குடிப்பாட்டு மக்கள்
நிகழ்ச்சி நிரல்
சித்திரை 7 செவ்வாய் (20-4-2021) 9.00 மணிக்கு காப்பு கட்டுதல்
சித்திரை 8 புதன் (21-4-2021) இரவு 9.00 மணிக்கு உற்சவர் திருக்கோயிலை சுற்றி வலம் வருதல்
சித்திரை 9 வியாழன் (22-4-2021) இரவு 9 மணிக்கு கையேந்தி பூத வாகனத்தில் சாமி புறப்படுதல்
(கீரம்பூர் கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
சித்திரை 10 வெள்ளி (23-4-2021) இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சாமி புறப்படுதல்
(குஞ்சாம்பாளையம் கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
சித்திரை 11 சனி (24-4-2021) இரவு 9.00 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி புறப்படுதல்
(தட்டாங்குட்டை கோத்திரங்கள் கட்டளை)
சித்திரை 12 ஞாயிறு (25-4-2021) இரவு 9.00மணிக்கு சப்பாரத்தில் சாமி புறப்படுதல்
(ராசாம்பாளையம் கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
சித்திரை 13 திங்கள் (26-4-2021) இரவு 9.00 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமி புறப்படுதல்
(புலவர் பாளையம் கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை வண்ணார்கள் கட்டளை)
சித்திரை 14 செவ்வாய் (27-4-2021) மாலை 5.00 மணிக்கு சக்தி பூஜை அம்மை அழைப்பு
இரவு 9.00 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமி புறப்படுதல்
(ஆண்டிபட்டி கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
சித்திரை 15 புதன் (28-4-2021) இரவு 9.00 மணிக்கு பூந்தேரில் சாமி புறப்படுதல்
நையாண்டி மேளம் கரகாட்டம்
(ஆண்டிபட்டி புதூர் கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
சித்திரை 16 வியாழன் (29-4-2021) அதிகாலை முதல் பொங்கல் வைத்தல்
காலை 9.00 மணிக்கு பெரிய தேர் திருக்கோயிலை சுற்றி வலம் வருதல்
மாலை 4.00 மணிக்கு பொங்கல் பூஜை பூஜை முடிந்து பொங்கல் சீருடன் முப்பட்டுகாரர் பிப்பாட்டுகாரர்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தல்
இரவு 9.00 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமி புறப்படுதல்
(வேட்டுவம்பாளையம்
கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
29-4-2021 இரவு 10 மணிக்கு நாடகம்
சித்திரை 17 வெள்ளி (30-4-2021) 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில் உற்சவரை திருவீதி வழியாக திருக்கோயிலுக்கு எடுத்துச்சென்று சாமிக்கு காப்பு கங்கனத்தை கலைத்து பூஜை முடித்து மஞ்சள் நீராடுதல்
மாலை 5.00 மணிக்கு மறு அபிஷேகம் செய்து காப்பு கட்டி இருந்த ஐயரையும் பண்டாரத்தையும் முப்பாட்டுக்காரர் பிப் பாட்டுக்காரர் இவர்களுடன் கோயில் வீட்டுக்குச் சென்று சாத்துமுறை சாமான்களை வைத்து விட்டு காப்பு கட்டி இருந்த இருவரையும் அவரவர் வீட்டுக்கு அழைத்து விடுதல்
இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமி புறப்படுதல்
(மணவாடி கந்தசாரப்பட்டி கோத்திரக் கவுண்டர்கள் கட்டளை)
தலைக்கட்டு ஆண்டு வரியை திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்
Temple Contact Number : 04286267670
-
Parking : (No booking)
YES
Take a peek below of our very first livestream
Share this event