Jobs in Chennai High Court - ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் - 3557 vacancy.

 Education & Jobs
04440016236
29/04/2021 - 30/06/2021 (06:00 AM - 06:00 PM)
Views : 1251
Chennai, Tamil Nadu, India Free

Description

8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 3500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மொத்தம் 3557 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

Madras High Court வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி;

Office Assistant -1911
Office Assistant cum Watchman - 01
Copyist Attender - 03
Sanitary Worker - 110
Scavenger - 06
Scavenger/Sweeper - 18
Scavenger or Sanitary Worker - 01
Gardener - 28
Watchman - 496
Night Watchman - 185
Night Watchman cum Masalchi - 108
Watchman cum Masalchi - 15
Sweeper - 189
Waterman/woman - 01
Masalchi - 485

என மொத்தம் 3557 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரருக்கு 01.07.2021 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :
சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள்:
அறிவிப்பு வெளியான நாள் - 18.04.2021
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் சமர்ப்பித்தற்கான கடைசி நாள் - 06.06.2021 செலான் வழியாக இந்தியன் வங்கியில் கட்டம் செலுத்த கடைசி நாள் - 06.06.2021

விண்ணப்பிக்கும் முறை :
சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளத்தின் மூலம் 18.04.2021 முதல் 06.06.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் மூன்று தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, விண்ணப்பதாரருக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் Oral Test உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Apply now immediately

Phone number (for Application/Payment related queries) - 044 40016236
Email id - MHCCRBS@onlineregistrationform.org

Agenda

  • No agenda added

Event Location

Agenda

  • No agenda added

Event Location

×