5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வாக்களியுங்கள்: சீமான்

 Splash
0000000000
12/03/2021 - 31/05/2021 (12:00 PM - 12:00 AM)
Views : 492
SPLASH Free

Description

5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வாக்களியுங்கள்: சீமான் பேச்சு

5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு வாக்களியுங்கள் என்று மக்களிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

ஓசூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லட்சுமிக்கு ஆதரவாக சீமான் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறும்போது, ''சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நாடு இந்தியா. சாலை பராமரிப்பு, துறைமுகம், கல்வி, மருத்துவம், ஆயுதம் உள்ளிட்ட அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. அனைத்தையும் அரசாங்கம் தனியாரிடம் கொடுத்துவிட்டு, வரி வசூலை மட்டும் செய்து வருகிறது.

முத்து ராமலிங்கத் தேவர் 'ஓட்டுக்குக் காசு கொடுக்கிறவன் பாவி, அதை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறவன் தேசத் துரோகி' என்று கூறினார். அறிஞர் அண்ணா, 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா?' என்று கேட்டார். அவர் பெயரைச் சொல்லிப் பல ஆண்டுகளாக அரசியல் செய்கிற இவர்கள்தான் (திமுக, அதிமுக) தங்கத்தைத் தவிட்டுக்கு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இம்முறையும் காசு கொடுப்பார்கள். ஆனால் என் மக்களிடம் வேண்டுவது ஒன்றுதான், நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். ஆயிரம், ஐநூறு வேண்டாம். 5 ஆயிரம், 10 ஆயிரம் கேளுங்கள். அப்போதுதான் ஓட்டு போடுவேன் என்று சொல்லுங்கள்'' என சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் இதுவரை தனித்து மட்டுமே களம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Agenda

  • No agenda added

Take a peek below of our very first livestream

×