வேலைவாய்ப்பு வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு மனு - 2021

0
Views : 957

Posted: 11 months ago

NEWS

Description

மனுப் பரிசீலனை முகப்பு:

தமிழக அரசின் மனுப் பரிசீலனை முகப்பு (மின்-மாவட்ட பொதுமக்களின் குறைதீர்ப்பு நாள்) என்பது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அன்றாட அலுவல்களில் இரண்டற கலந்த ஒன்று. இது பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், பொது மக்கள் சேவை மையம் / இ-சேவை மையம் மற்றும் இணையவழி முறைகளில் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கவும், மனுக்களின் நிலையை அறியவும் உதவுகிறது.

மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையால் மனுக்களின் மீது பல்வேறு நிலைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் வரை சம்பந்தப்பட்ட துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது.

மாவட்ட நிர்வாகம் மனுக்களின் மீதான நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கிறது. இந்த மனுப் பரிசீலனை முகப்பினை அனைத்து துறைகளும் / நிறுவனங்களும் / நகர்புற உள்ளாட்சிகளும் தங்களது நிர்வாக அமைப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

பயன்கள் :

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் மனுக்களை இணையதள மூலமாக சமர்ப்பிக்கலாம்.

குறிப்பு :

- தமிழ் மொழியில் மட்டும் மனு இருத்தல்வேண்டும்.

- மனுக்கள் சமர்ப்பித்த 100 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.

- விண்ணப்பிக்க கடைசி தேதி 31-07-2021

விண்ணப்பிக்கும் முறை :

Jamabandhi petition portal மூலம் தங்கள் மனுக்களை சமர்ப்பிக்கவும்.

Click here to apply petition

Similar Posts

×