குருவித்தலை பாகல் முதல் யானைத்தந்த வெண்டை வரை…! பலவிதமான பாரம்பர்ய விதைகள்

0
Views : 1761

Posted: 11 months ago

NEWS

Description

'விவசாயம் எங்களோடு முடியட்டும். நீ நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போ’ என்ற நிலைமாறி, படித்த இளைஞர்கள் தற்போது விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாறிப்போன உணவு முறைகள், நாட்டு விதைகள் அழிவு, வீரிய விதைகள் பரவலாக்கம் போன்ற பிரச்னைகள் இளைஞர்களை விவசாயம் நோக்கித் திருப்பிக்கொண்டிருக்கிறது.

அப்படி, பொறியியல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ஆனந்த், இப்போது நாட்டுக் காய்கறி, கீரை விதைகளைச் சேகரிக்கும் மனிதராக மாறியிருக்கிறார். இயற்கை உணவு தானியங்கள், சிறுதானியங்களை இந்தியா முழுக்க விற்பனை செய்துகொண்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் வாலவந்திநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் ‘உழவர் ஆனந்த்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி மற்றும் இயற்கை விதை விற்பனைக் கூடத்தை நடத்தி வருகிறார். 

2003-ஆம் வருடம் பொறியியல் படிப்பை முடித்த ஆனந்த் கேரளாவில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். 2009ஆம் வருடம் வரை அங்கு வேலை பார்த்தார் இதற்கிடையில் திருமணம் நடந்தது பிறகு சுயமாக தொழில் செய்ய முடிவு செய்தார் வேலையை விட்டுவிட்டு சென்னையில் துறை சார்ந்த ஒரு கம்பெனியை ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் மா, தென்னை, நெல், கரும்பு என்று அவர் அப்பா விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ஆனந்தின் அம்மா அப்பா இருவரும் உயிர்துறந்தனர். பிறகு ஆனந்த்  விவசாயத்தில் ஈடுபட்டார்.

இயற்கைக்குக் கிடைத்த வரவேற்பு:

‘‘விவசாயம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, கரூர் வானகத்துக்குப் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டார் அதன்பிறகு, மாந்தோட்டத்தையும் தென்னை மரங்களையும் இயற்கை முறையில் காய்க்கப் பழக்கினார். இரண்டு வருடத்திலேயே நல்ல பலன் கிடைத்தது சென்னையில் நான்கு நாட்கள் நாமக்கல்லில் மூன்று நாட்கள் என செயல்பட்டார். இயற்கை முறையில் விளைந்த கொல்லிமலை மிளகை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்தார் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விலாசம் கொடுத்த விதைத்திருவிழாக்கள்:

இந்தியா முழுக்க நடந்த விதைத்திருவிழாவுக்குப் போக ஆரம்பித்தார். மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்த விதைத் திருவிழா, மைசூரில் நடைபெற்ற விதைத் திருவிழா, கேரளா வயநாட்டில் ஒரு வாரம் நடைபெறும் விதைத் திருவிழா.

ஆன்லைன் விற்பனை:

‘‘தமிழ்நாடு முழுக்க இயற்கை விதைகளைச் சேகரிக்கும் ஆர்வலர்களிடம் பேசி, காய்கறி, கீரை விதைகளைச் சேகரிக்க ஆரம்பித்தார்.  ஆன்லைன் மூலமாக விளம்பரப்படுத்தி, இயற்கை விவசாயிகள், மாடித்தோட்டம் போட விரும்புபவர்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தார்.  2018-ம் வருடம் சென்னையிலிருந்த நிறுவனத்தை நாமக்கல்லுக்கு மாற்றினார். 2018-ம் வருடம் இந்த ‘உழவர் ஆனந்த்’ கடையை, ரூ.20,000 முதலீட்டில் ஆரம்பித்தார்.  

கொல்லிமலை மிளகு, பாரம்பர்ய அரிசி வகைகள், செக்கு எண்ணெய், சிறுதானிய தின்பண்டங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, கொத்தமல்லினு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தமிழகம் முழுக்க விவசாயிகளிடம் வாங்கினார். அதை ‘பேக்’ பண்ணி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.   ஒன்றரை வருடம்  வரை பெரிதாக வருமானம் இல்லை. பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தன்னிடம் உள்ள விதைகள் பற்றிப் பேசினார்.

‘‘ஒரு விவசாயியிடம் பலபேர் உணவுப்பொருள்கள் வாங்கி, ‘குடும்ப விவசாயி’ முறையை நடைமுறைப்படுத்தலாம்.’’


100 வகையான விதைகள்:

‘‘4 வகை மிளகாய், 15 வகை தக்காளி, கொல்லம்பட்டி கத்திரி, பவானி கத்திரி, மணப்பாறை கத்திரி, நாமக்கல் முள்ளுக்கத்திரினு 15 வகைக் கத்திரி, யானைத்தந்த வெண்டை, சிவப்பு வெண்டை, மலை வெண்டைனு 15 வகை வெண்டை, குண்டு சுரை உள்ளிட்ட 2 வகை சுரை விதைகள்னு பலவகை விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். இதுதவிர, புடலையில் 2 ரகம், பாகலில் குருவித்தலை பாகல், மிதி பாகல்னு 2 வகை, கீரைகளில் 20 வகைனு சுமார் 100 வகையான காய்கறி, கீரை விதைகளைச் சேகரிச்சு இருக்கேன். அதை, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறார்.

சுபநிகழ்வுகளில் விதை கொடுப்பதை ஒரு சடங்காக மாற்றும் பொருட்டு, தாம்பூல பைகளுக்குப் பதிலாக விதைகள் அடங்கிய ‘கவர்’கள் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

கோயம்புத்தூரில் ஒரு தம்பதி 2,500 விதை உறைகளை (கவர்களை) வாங்கி, அங்கு வந்த உறவினர்களுக்கு வழங்கினார்கள். இதுகுறித்து, சமூக வலைதளங்களில் அதிகம் எழுதினார். அதைத்தொடர்ந்து, கோயில் திருவிழா, 60-ம் திருமண விழா, பிறந்தநாள் விழான எல்லாவகையான சுபநிகழ்வுகளுக்கும் விதை உரைகளை வழங்கி வருகின்றார்.  ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை, புனே, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இவரிடம் விதைகளை வாங்குகின்றனர்.

நாட்டு விதைகள் என்று சொல்வதைவிட உள்ளூர் விதைகள் என்று தான் சொல்ல வேண்டும் பழந்தமிழர்கள் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் பயிரிட்ட உணவுப் பொருள்களை தான் உண்டு வாழ்ந்தார்கள் இதனால்தான் அந்த காலத்தில் ஊருக்கு ஒரு பயிர் ரகம் இருந்தது என்று சொல்வார்கள். ஆனால் நமது பாரம்பரிய விதைகளை விதைப்பது இயற்கை விவசாயத்தையும் விதைகளையும் அதிகரிக்க வேண்டுமென்றால் விவசாயிகள் விவசாயத்தோடு போகக்கூடாது குடும்ப மருத்துவர் குடும்ப வக்கீல் இதுபோல குடும்ப விவசாயி என்பதை வலியுறுத்த வேண்டும்.


மாதம் ரூ.50,000 லாபம்:

கணினி, சமூக வலைதளங்களை நுணுக்கமாக இயக்கத் தெரிந்த இளைஞர்கள், இதில் முதலில் கால்பதித்தால் சுலபமாகச் சாதிக்க முடியும். அதன் பிறகு, விவசாய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தொடர்ந்து விவசாயத்தில் இறங்கலாம். அதேபோல, உணவுப் பொருள்களை விளைவிக்கத் தெரிஞ்ச விவசாயிகள், அதை மதிப்புக்கூட்டி விற்கவோ, நேரடியாக விற்பனை செய்யவோ முயற்சி செய்ய வேண்டும். மாதம் ரூ.50,000 லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு, ஆனந்த்,

செல்போன்: 98409 60650

Join our Telegram for more updates

Similar Posts

×